காலாவதியான பேருந்துகளை இயக்கி மக்கள் உயிருடன் விளையாடுவதாக இபிஎஸ் கண்டனம்
மக்கள் அச்சமில்லாமல் பயணிக்கும் வகையில் புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்கவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி ஏற்பட்ட 36 மாத காலத்தில், அவ்வப்போது புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாகவும், இ-பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர, புதிய பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
காலாவதியான பஸ்களை ஓட்டியே தீரவேண்டும் என்று ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுவதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஓட்டை, உடைசலான பேருந்துகளை இயக்கி அரசு மக்களின் உயிருடன் விளையாடி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
நிதிப் பற்றாக்குறை என்ற பல்லவியை பாடாமல் கடன் வாங்கிய 3 லட்சம் கோடியில், புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
Comments