நகை வியாபாரியிடம் 80 சவரன் தங்க நகை, 7 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த ஹெல்மெட், மாஸ்க் அணிந்த கும்பல்
காரைக்குடியில் நடந்து சென்ற நகை வியாபாரியை வழிமறித்து பட்டா கத்தியை காட்டி மிரட்டி 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றவர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை சௌகார்பேட்டையிலிருந்து நகைகளை வாங்கிக் கொண்டு பேருந்து மூலம் வந்த நகை வியாபாரி சரவணன், வீட்டிற்கு நடந்து சென்றபோது ஐந்து விளக்கு பகுதியில் 3 டூவீலர்களில் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள், தன்னை கத்தியை காட்டி மிரட்டி துணிகரத்தில் ஈடுபட்டதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
நேற்று 100 அடி சாலையில் நடந்து சென்ற வெங்கடாசலம் என்பவரிடம் இதே முறையில் லேப்டாப் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 3 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடிவருவதாக காரைக்குடி போலீசார் தெரிவித்தனர்.
Comments