மம்தா அரசு ஊழலின் மையமாகத் திகழ்கிறது - பிரதமர் மோடி விமர்சனம்
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஊழலின் மையமாக விளங்குவதாகவும், அந்த மாநிலத்தில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
ஜார்கிராம் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தொழிற்சாலைகள் முதல் அனைத்து உள்கட்டமைப்புகளையும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி சிதைத்து அழித்துவிட்டதாகவும், அதனால் மேற்கு வங்கம் வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கையில் பணம், அந்தக் கையில் வேலை என ஏலம் விட்டுக் கொள்ளையடிப்பதாக மோடி குற்றம் சாட்டினார்.
இண்டியா கூட்டணியும் திரிணமூல் காங்கிரஸும் காலாவதியாகிவிட்டதாகவும், ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு முழுவதுமாக காணாமல் போய்விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments