சகோதரியின் திருமண நாளில் வரதட்சணை கொடுமையில் பெண் மரணம்?

0 451

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண், கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், வரதட்சணை கொடுமையால் மரணமடைந்ததாக புகார் எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் அவரது சகோதரிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அதே நாளில் ஜெனிபர் மர்மமான முறையில் உயிரிழந்ததார்.

திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜெனிபரின் மாமியாரும் நாத்தனாரும் அங்கிருந்த சீர் வரிசைப் பொருட்களை செல்போனில் படமெடுத்து வைத்துக் கொண்டு பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மாமியாருடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற ஜெனிபர், தமது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரதட்சணை கேட்டு தான் தாக்கப்படுவதாக கூறியுள்ளார்.

ஜெனிபரின் உடல் வைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் திரண்டிருந்த உறவினர்களை சந்தித்த சீர்காழி கோட்டாட்சியர் பொறுப்பு வகிக்கும் அர்ச்சனா, உரிய விசாரணை நடத்தி மாமியார் இருதயமேரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments