ஊழல் செய்வதில் சாதனை செய்த கட்சி காங்கிரஸ்: பிரதமர்

0 195

உலகமே வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்வதில் சாதனை செய்து கொண்டிருந்ததாக பிரதமர் மோடி கூறினார்.

மேற்குவங்க மாநிலம் ஜார்கிராமில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர், ஒவ்வொரு தருணமும் மற்ற நாடுகள் முன்னேறிய சூழலில் இளைய தலைமுறையினரை காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இருந்ததாக தெரிவித்தார்.

காங்கிரசை மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என விமர்சித்த பிரதமர், கூட்டணி கட்சியினர் மீது தற்போது சவாரி செய்தாலும், காங்கிரஸ் விரைவில் காணாமல் போவது உறுதி என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments