கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 4 வயது சிறுவன் மற்றும் தாயை கயிறு மூலம் மீட்ட தீயணைப்பு துறை

0 385

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பள்ளங்கி கோம்பை அருகே உள்ள மூங்கில்காடு பகுதியில் செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது 4 வயது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் சவுந்தர்யா என்பவர் சுமார் 4 மணி நேரம் கரையிலேயே காத்திருந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி இருவரையும் மீட்டனர். கோட்டாட்சியர் வாகனத்தில் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments