பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் ரூ.1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக புகார்... குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த போலிசார்

0 285

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் பாஜக பிரமுகர் விஜயகுமார் என்பவர் வீட்டில் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிசிடிவி பதிவுகளை கொண்டு கைது செய்யப்பட்ட அன்பரசனிடம் இருந்து 18 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு அழுத்தம் தர வேண்டி ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை போனதாக தவறான தகவல்களை தந்த விஜயகுமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments