பழனி முருகன் கோயிலுக்கு கிரிவலம் வந்த விவசாயிகள் திடீர் மாட்டுவண்டிகள் பந்தயம்... வாகன ஓட்டிகள் போலீசில் புகார்

0 368

பழனி முருகன் கோயிலுக்கு கிரிவலம் செல்வதற்காக உடுமலை, கொழுமம், குமரலிங்கம், பாப்பம்பட்டி, மடத்துக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்த விவசாயிகள் திடீரென்று பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளாபந்தயத்தில் ஈடுபட்டனர்.

பந்தயம் நடந்தது குறித்து வாகன ஓட்டிகள் புகார் அளித்ததை தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மற்றவர்களை எச்சரித்து அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments