அஜர்பைஜான் வனப்பகுதியில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
அஜர்பைஜான் வனப்பகுதியில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 63. அஜர்பைஜான் சென்று விட்டு பெல் 212 ரக ஹெலிகாப்டரில் டெஹரான் திரும்பியபோது, கடும் பனிமூட்டம் காரணமாக மலையில் மோதி விழுந்து ஹெலிகாப்டர் தீப்பற்றியது.
17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு விபத்து நடந்த பகுதி கண்டறியப்பட்டது.
விபத்தில் ரைசியுடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேரும் பலியானதாக ஈரான் அரசு அறிவித்தது. ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்த நிலையில், அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன் அந்த பகுதி மக்களிடம் ரைசி பேசிய வீடியோ வெளியானது.
அதிபர் ரைசியின் மரணத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஈரானின் இடைக்கால அதிபராக துணை அதிபர் முகமது முக்பாரை அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Comments