சிலந்தி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு நிறுத்தவேண்டும்... திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும்-அன்புமணி
திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டியுள்ள நிலையில், இப்போது சிலந்தி ஆற்றிலும் தடுப்பணை கட்டினால் அமராவதி ஆற்றை நம்பியுள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாலைவானமாகிவிடும் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Comments