பாஜக வேட்பாளருக்கு 8 வாக்குகள் செலுத்திய விவகாரத்தில் தொடர்புடையவர் கைது

0 519

உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு ஆதரவாக 8 வாக்குகள் செலுத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக, ராஜன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்துள்ளதாக உத்தர பிரதேச தலைமைத் தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடியில் பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வீடியோவை ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments