பாஜக வேட்பாளருக்கு ஒரே நபர் 10 வாக்குகள் அளிக்கும் வீடியோ வெளியான விவகாரம்

0 431

உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு ஆதரவாக ஒரு நபர் 8 வாக்குகள் செலுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அரசு இயந்திரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாகவும், அழுத்தத்தினால் தேர்தல் அதிகாரிகள் தங்களுடைய பொறுப்புகளை மறந்துவிடக் கூடாது என்றும் ராகுல் காந்தி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை என்று உத்தர பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments