நொய்யல் ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவு நீர்
கரூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீர் காவிரியோடு கலப்பதால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கலக்கும் போது டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் திண்டுக்கல், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீருடன் கலந்து செல்வதாக கூறப்படுகிறது.
இதனை பொதுமக்கள் பருகுவதால் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments