பெருமாள்கோவில்பட்டி கரும்பாறை முத்தையா கோவில் அசைவ விழா கோலாகலம்

0 348

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, சொரிக்காம்பட்டி ஒன்றியம் பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பொங்கல் வைத்து வழிபட்ட பிறகு, விழாவுக்காக கோவிலில் வளர்க்கப்பட்ட 125 ஆடுகள் பலியிடப்பட்டு 2,500 கிலோ அரிசியில் உணவு சமைத்து படைக்கப்பட்டது.

இந்தக் கறிவிருந்தில், 18 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர். சாப்பிட்ட இலைகள் காய்ந்த பிறகே, பெண்கள் அந்தக் கோவிலுக்கு தரிசனத்துக்கு வருவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments