தூத்துக்குடியில் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடித்த மர்மக் கும்பல்

0 343

தூத்துக்குடி, சின்னமணி நகர் இரண்டாவது தெருவில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த பத்தாம் தேதி குடும்பத்துடன் சுகுமார் சென்னை சென்ற நிலையில், வீட்டு வேலையாள் அமுதா என்பவர் அதிகாலை பணிக்கு வந்தபோது முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு சுகுமாருக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சுகுமார் அளித்த தகவலின்பேரில், மோப்ப நாய், தடயவியல் துறையினருடன் வீட்டில் சோதனை நடத்திய தென்பாகம் காவல்நிலைய போலீஸார், கொள்ளைக் கும்பலைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments