திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

0 373

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 30 மணி நேரும், 300 ரூபாய் தரிசனத்துக்கு 6 மணி நேரமும் ஆவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று சுமார் 71 ஆயிரம் பேர் தரிசனம் செய்த நிலையில், காணிக்கையாக உண்டியல் மூலம் 3 கோடியே 63 லட்ச ரூபாய் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments