திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை தொட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தல்
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கிவருகின்றன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் இவற்றை தொடுவதால் அரிப்பு, வீக்கம் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
மே, ஜூன் மாதங்களில் திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கும் என்றும், இவற்றை கைகளால் தொட வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். கோயில் வளாகத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments