4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுப்பதாக புகார்

0 437

4 ஆண்டுகளாக இளைஞர் ஒருவரும் தாமும் காதலித்து வருவதாகவும், சாதியை காரணம் காட்டி அவரது தந்தை திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இளம் பெண் ஒருவர் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வரும் தங்களது காதல் இரு குடும்பத்தினருக்கும் தெரியும் என்றும், காதலனின் குடும்பத்தினர் தம்மை நீண்ட காலமாக மருமகளே என்று அழைத்து வந்த நிலையில் தற்போது சாதி பிரச்சினை எழுப்புவதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

தமது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாலை 7 மணிக்கு காவல் நிலையம் சென்ற அப்பெண் இரவு 12 மணி வரை அங்கேயே இருந்தார்.

உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments