இப்ப இந்த பிசினஸ் தான் ஓடுது.. வீணான ஐ.டி.ஊழியரின் ராஜதந்திரம்.. லேப்டாப் பேக்கில் ரூ 1.5 கோடிக்கு கஞ்சா..! இனி சோதனை தீவிரமாக இருக்குமே..!

0 815

சென்னை மடிப்பாக்கத்தில் இரவு பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதாக கூறிய ஐ.டி ஊழியரின் லேப்டாப் பேக்கை சோதனை யிட்டபோது 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பாக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டது 

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 200 அடி ரேடியல் சாலையில் சம்பவத்தன்று மடிப்பாக்கம் தலைமை காவலர் பெரிய கருப்புசாமி என்பவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனர் முரளி கிருஷ்ணா தயக்கமின்றி போலீசாரிடம் பேசிய நிலையில், ஆட்டோவில் பின்புறம் அமர்ந்திருந்த ஐ.டி.ஊழியரான நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல் திரு திருவென விழித்தபடி பேசி உள்ளார்.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தான், பணி முடிந்து வருவதாக முதலில் தெரிவித்த ஸ்ரீனிவாச ராகுல் , சிறிது நேரத்தில் வெளியூர் சென்று விட்டு வருவதாக முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த தலைமை காவலர் , ஐடி ஊழியர் வைத்திருந்த லேப்டாப் பேக் மற்றும் சூட்கேஸை சோதனை செய்தார்

அதற்குள் வெள்ளை நிற டிரைபுரூட்ஸ் போல உலர்ந்த பொருள் ஒன்று பல பாக்கெட்டுகளில் இருந்தது. அதனை எடுத்து ஆய்வு செய்த போது அது உயர் ரக கஞ்சா என்பது தெரியவந்தது.
உடனடியாக ஐ.டி ஊழியர் ஸ்ரீனிவாச ராகுலை ஆட்டோவுடன் காவல் நிலையம் அழைத்துச்சென்றார் .

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள தெரியவந்தது.

அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்தார் ஸ்ரீனிவாச ராகுல் . டிப்டாப் உடை அணிந்து கையில் எது வைத்திருந்தாலும் போலீசார் அதனை சோதிக்க மாட்டார்கள் என்ற அவர், போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க இந்த வழியை கையில் எடுத்ததாக தெரிவித்தார்.

பல மாதங்களாக வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களிடம் பல மடங்கு விலைக்கு விற்று வந்த ஸ்ரீனிவாச ராகுலிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த 6 கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments