ஐதராபாத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்ற கும்பல்
ஐதராபாத்தில் இருந்து ஆன்லைன் செயலி மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து அவற்றை தண்ணீரில் கரைத்து மருந்தூசியில் ஏற்றி, ஒரு சிரஞ்ஜ் மூவாயிரம் ரூபாய் வரை விற்றதாக சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் போதை வஸ்துகளை சிரஞ்சு மூலம் உடலில் ஏற்றி இளைஞர்கள் சிலர் உயிரிழந்தது பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு தண்டயார்பேட்டை திருநாவுக்கரசு தோட்டத்தில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் கணேஷ் என்ற இளைஞரின் வீட்டில் சோதனை நடத்தி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் நேரு நகரில் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய ராஜேஷ் என்கிற சின்னப்பாம்பு, ரஞ்சித் என்கிற பாம்பு ரஞ்சித், உதயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து 1110 மாத்திரைகள், 10 போதை சிரெஞ்சிகளை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைனில் ஒரு அட்டை போதை மாத்திரையை 350 ரூபாய் வீதம் வாங்கி 2 ஆயிரம் ரூபாய் வீதம் விற்று வந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
Comments