பீகார், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் நாளை மாலையுடன் முடிவடைகிறது 5-ஆவது கட்ட மக்களவைத் தேர்தல் பிரசாரம்
மக்களவைத் தேர்தலின் 5-வது கட்டத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. பீகார், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் மே 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுடன் ஒடிஸா சட்டசபைக்கும் இரண்டாவது கட்டமாக 35 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முக்கிய வேட்பாளர்களாக, ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தி, அமேதியில் ஸ்மிருதி இரானி, லக்னோவில் ராஜ்நாத் சிங், வடக்கு மும்பையில் பியூஷ் கோயல், ஹாஜிபூரில் சிராக் பாஸ்வான், சரனில் ராஜீவ் பிரதாப் ரூடி, பாரமுல்லாவில் ஒமர் அப்துல்லா, தெற்கு மும்பையில் அரவிந்த் சாவந்த் போட்டியிடுகின்றனர்.
இதுவரை நான்கு கட்டமாக 379 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 66 புள்ளி 95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Comments