மூதாட்டியைக் கொன்று நகைகளைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

0 321

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியை அடுத்த கணக்கனேந்தல் கிராமத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்து, 3 சவரன் சங்கிலியையும் 2 சவரன் தண்டட்டியையும் பறித்துக் கொண்டு பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற இருவரை பொதுமக்களே மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மணிகண்டன், சிலம்பரசன் ஆகிய இருவரும் அதே ஊரில் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளனர். மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டம் விட்டு வந்தவர்கள், சமயம் பார்த்து மூதாட்டியை அடித்துக் கொன்றுவிட்டு, தனியார் பேருந்திலேறி தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.

அவர்களது சட்டையில் படிந்திருந்த ரத்தக்கறையை வைத்து, அப்பகுதி இளைஞர்கள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த நிலையில், மேலும் ஒரு கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments