ஆம்ஆத்மி கட்சி எம்பி ஸ்வாதிமாலிவாலை தாக்கியதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு

0 347

ஆம் ஆத்மி கட்சி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றிருந்த போது ஸ்வாதிமாலிவால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்று வந்த ஸ்வாதிமாலிவால், தனக்கு நேர்ந்தது மிகவும் மோசமானது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments