மும்பை காட்கோபாரில் விளம்பரப் பலகை விழுந்து 16 பேர் பலியான விவகாரம்... விளம்பர நிறுவன உரிமையாளர் கைது

0 333

மும்பை காட்கோபாரில் கடந்த திங்களன்று ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் கனமழையில், மிகப்பெரிய விளம்பர பலகை விழுந்து 16 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த, விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் பவேஷ் பின்டே கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து மும்பை அழைத்து வந்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட 20 வழக்குகள் ஏற்கனவே அவர் மீது இருப்பது தெரியவந்துள்ளது.

40க்கு 40 அடிக்கு மேல் விளம்பர பலகை வைக்க கூடாது என்று மாநகராட்சி விதிமுறை உள்ள நிலையில், 120க்கு 120 அடியில் சட்டவிரோதமாக பவேஷ் வைத்திருந்த விளம்பர பலகை லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments