சென்னை ஐஐடியில் கலாச்சார, கலை பிரிவுக்கு இட ஒதுக்கீடு - ஐஐடி இயக்குநர்

0 234

சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது போல் கலை கலாச்சாரப் பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்ய திட்டம் உள்ளதாக அதன் இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.

ஐ.ஐ.டி.யில் மே 20-ஆம் தேதி இளையராஜா பங்கேற்கும் துவக்க நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் சர்வதேச கலாச்சார மாநாடு 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள காமகோடி, மாநாட்டில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments