4 வயது சிறுமிக்கு கைக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த கோழிக்கோடு அரசு மருத்துவமனை..!
கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கையில் இருந்த ஆறாவது விரலை அகற்றுவதற்காக சென்ற 4 வயது சிறுமிக்கு, மருத்துவர்கள் கவனக்குறைவாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்ஷினா என்பவரின் வயிற்றுக்குள் மருத்துவர்கள் கத்திரிக்கோலை வைத்து தைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
Comments