யார் நினைத்தாலும் சி.ஏ.ஏ. சட்டத்தை நீக்க முடியாது: பிரதமர்

0 361

மதசார்பின்மை என்ற பெயரில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மோதலை தூண்டிவிட்ட எதிர்க்கட்சிகளின் சதியை தாம் அம்பலப்படுத்தி இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் லால்கஞ்சில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர், சி.ஏ.ஏ. சட்டத்தை யார் நினைத்தாலும் நீக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது குடியுரிமை பெற்றிருப்பவர்கள் மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்த பிரதமர், வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றி பொய் பரப்பும் எதிர்க்கட்சிகளின் முகமூடி கழற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments