கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
விசாரணையின் போது கைது செய்யாமல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒருவர் நீதிமன்ற சம்மன்களுக்கு ஆஜராகவில்லை என்றால், நீதிமன்ற உத்தரவை பெற்றுத்தான் அவரை கைது செய்ய முடியும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
கைதுக்கான காரணங்களை கைது செய்யப்படுபவருக்கு உடனடியாக அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதாலும், மாறுபட்ட வாக்குமூலங்களை முகாந்திரமாகக்கொண்டும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
Comments