ராமநாதபுரத்தில் கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் பறிமுதல்... உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
ராமநாதபுரத்தில் உள்ள டவுன் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மற்றும் ஆப்ரிக்க தேளி மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கெட்டுப்போன 20 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
அம்மீன்களை பினாயில் ஊற்றி அழித்த அவர்கள், கெட்டுப்போனவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ ஆப்பிரிக்க தேளி மீன்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments