ரூ.2.25 கோடி மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஜானிதாமஸ் கைது

0 305

இரண்டே கால் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ‘நான்சென்ஸ்’ என்ற மலையாள திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜானிதாமஸ் கைது செய்யப்பட்டார்.

கனடாவில் வசித்து வரும் கோவை வடவள்ளியைச் சேர்ந்த துவாரக் உதயசங்கர் என்பவருக்கு அவரது நண்பர் மூலமாக அறிமுகமான ஜானிதாமஸ், தான் தயாரிக்கும் சினிமாவிற்காக இரண்டே முக்கால் கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதில், 50 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பித் தந்து விட்டு ஏமாற்றியதாக துவாரக் அளித்த புகாரில் ஜானிதாமஸ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளிநாடு செல்வதற்காக நெடும்பாசேரி விமான நிலையத்திற்குச் சென்றவரை போலீஸார் கைது செய்து கோவை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments