பார்ப்பது CSKவுக்கு எடுபிடி வேலை.. செய்தியாளரை தாக்கி விட்டு தன்னை ஜனாதிபதி என்ற ரிட்டையர்டு போலீஸ்.. இவர்களுக்கு எல்லாம் கட்டுப்பாடு இல்லையா..?

0 1487

சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை படம் பிடிக்க கூடாது என்று செய்தியாளரை தடுத்து தாக்கிய ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மோகன்ராஜ், தன்னை இந்திய ஜனாதிபதி என்று கூறிச்சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது...

சென்னை விமான நிலையம் வந்திறங்கிய தோனியை படம் பிடிக்க விடாமல் செய்தியாளரை தடுத்த ரிட்டையர்டு காவல் அதிகாரி மோகன்ராஜ் இவர் தான்..!

பெங்களூருவில் நடக்க இருக்கின்ற ஐ.பி.எல் போட்டிக்கு செல்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இரு பேருந்துகளில் சென்னை விமான நிலையம் வந்திறங்கினர்.

அங்கு மஞ்சள் பனியனுடன் வந்திருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆணையர் மோகன்ராஜ் என்பவர் இங்கே படம் பிடிக்க கூடாது என்று எச்சரித்து விரட்டினார்.

சென்னை அணியில் வீரர் களை படம் பிடித்த செய்தியாளரை நோக்கி கைகளால் தாக்கி தடுத்த மோகன்ராஜ், தோனியை படம் பிடிக்கவிடாமல் தடுத்த தோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரை ஒறுமையில் அழைத்தார்.

தோனியை கண்டதும் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர், செய்தியாளர்களை தடுத்த திருப்தியில் ஓடிச்சென்று டோனியிடம் சென்று தனது வீர தீர சாகசத்தை பகிர்ந்து கொண்டார் மோகன்ராஜ்.

வெளியே வந்த மோகன்ராஜிடம் செய்தியாளர்களை தடுக்க நீங்கள் யார் ? என்று கேள்வி எழுப்பியதும், தன்னை அவர் இந்திய ஜனாதிபதி என்றும் தனது பெயர் ராஜேந்திர பிரசாத் வர்மா என்று பெயரை மாற்றிக் கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றார்.

தனியார் செக்கியூரிட்டி நிறுவனத்தில் பணியில் உள்ள ரிட்டையர்டு ஏசி மோகன்ராஜ் தனது அடையாள அட்டையை மஞ்சள் பனியனுக்குள் மறைத்துக் கொண்டு செய்தியாளரை தடுத்து தாக்கியதுடன், தன்னை இந்திய ஜனாதிபதி என்று மோசடியாக கூறிச்சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments