"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு..!
திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அத்துறை இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், சொறி கொண்ட கடுமையான காய்ச்சல், கடும் வயிற்றுப்போக்கு, இன்ஃப்ளூயன்ஸா, மூளையழற்சி, மந்தமான பக்கவாதம் போன்ற நோய்க்குறிகளுடன் வரும் நோயாளிகளின் காய்ச்சல் அறிக்கைகளை சேகரிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ கருவிகள் படுக்கைகள் போன்றவை சரியான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments