கூவம் ஆற்றில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் அபாயம்..!

0 231

மீண்டும் தொடங்கி உள்ள மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்காக அகற்றப்படும் ராட்சத தூண்கள், கான்கிரீட் கழிவுகள், மண் போன்றவை, கரையை ஒட்டி கூவம் ஆற்றிலேயே கொட்டி வைக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் கூறினர்.

சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டையில் கூவம் ஆற்றின் 10 இடங்களில் பாதியளவு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இவற்றை முழுமையாக அகற்றுவது குறித்து கட்டுமான நிறுவனம் பதில் அளிக்க மறுத்துள்ளது.

வடகிழக்கு பருவ மழைக்கு முன் கட்டிடக் கழிவுகளை அகற்றாவிட்டால் கூவம் ஆற்றில் வெள்ள ஓட்டம் தடைபட்டு குடியிருப்புகளுக்குள் மழைவெள்ளம் புகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments