சாலையோரம் கிடந்த பிறந்து 3 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கண்டெடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருநங்கை..!

0 439

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் கிடந்த, பிறந்து 3 மணி நேரமே ஆனதாகக் கருதப்படும் பச்சிளம் பெண் குழந்தையை கண்டெடுத்து திருநங்கை ஒருவர் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைத்தார்.

திருச்சியில் இருந்து சென்னை வரும் மார்க்கத்தில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்ததாகவும், அங்கு கிடந்த குழந்தையை 108 ஆம்புலன்சை வரவழைத்து அனுப்பி வைத்ததாகவும் கடமலைப்பட்டூரைச் சேர்ந்த லட்சுமி என்ற அந்த திருநங்கை கூறினார்.

குழந்தையை வீசிச் சென்றது யார் என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY