தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க தேளி மீன் 800 கிலோ பறிமுதல்.. குழி தோண்டி புதைத்து அழித்த அதிகாரிகள்..!
ராமநாதபுரம் அருகே, வாகன சோதனையின்போது அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க தேளி மீன் 800 கிலோ சிக்கியது.
கோழி தீவனமாக பயன்படுத்த எடுத்து செல்வதாக வாகன ஓட்டுநர் கூறியதை ஏற்க மறுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அவற்றை குழி தோண்டி புதைத்து அழித்தனர். அதிக கொழுப்புச்சத்து கொண்ட இந்த ஆப்ரிக்க தேளி மீன்களை உண்பதால், புற்றுநோய், குழந்தையின்மை, இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குளத்தில் உள்ள அனைத்து நாட்டு மீன்களையும் உண்டு, அவை வாழ தகுதியற்ற இடமாக நீர்நிலைகளை மாற்றிவிடும் என்பதால் ஆப்பிரிக்க தேளி மீன்களை வளர்க்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments