காஞ்சிபுரத்தில் போலி பட்டு விற்பனை மற்றும் விலை உயர்வால் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புடைய ஒரிஜினல் கைத்தறி பட்டுப்புடவைகள் தேக்கம்
காஞ்சிபுரத்தில் போலி பட்டு விற்பனை மற்றும் விலை உயர்வால் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புடைய 70 ஆயிரம் ஒரிஜினல் கைத்தறி பட்டுப்புடவைகள் தேங்கியுள்ளதாகவும், அவற்றை கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை, போலி பட்டுகளாலும் விற்பனை பாதித்துள்ளதாக காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
விற்பனை மந்தமானதால் பட்டுச்சேலை உற்பத்தியும் குறைக்கப்பட்டதால், ஒரு மாதத்தில் மூன்று சேலைகளை நெய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் பணி வழங்கப்படுவதாக கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்தனர்.
Comments