கனடாவில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீ... புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெளியேற அறிவிப்பு

0 257

கனடாவின் ஆல்பர்ட்டா காட்டுப்பகுதியில் கடந்த வாரம் பற்றிய தீ, காற்றின் வேகத்தால் அதிகரித்து எண்ணெய் வளம் கொண்ட ஃபோர்ட் மெக்முரே நகரை நோக்கி வருவதைத் தொடர்ந்து 6 ஆயிரம் பேர் அந்நகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நாட்டின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்த நகரில் தான் நடப்பதாகவும் ஒரு நாளைக்கு சுமார் 3.3 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புறநகர்ப் பகுதிகளான அபாசண்ட், பீக்கன் ஹில், ப்ரேரி க்ரீக் மற்றும் கிரேலிங் ஆகிய இடங்களில் வசிப்பவர்களும் உடனடியாக வெளியேற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments