ஒரு கோடி லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் உதவிய காவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது

0 577

சென்னை சோழிங்கநல்லூரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய சமூக ஆர்வலர் பொன் தங்கவேலிடம், ஆக்கிரமிப்பை அகற்றுவதால் அருகில் உள்ள அவரது நிலத்தின் மதிப்பு உயரும் எனக் கூறி, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக தாசில்தார் சரோஜா கைது செய்யப்பட்டார்.

பேரம் பேசி 20 லட்ச ரூபாய்க்கு இறங்கி வந்த அவர்,  முன்பணமாக 3 லட்சம் ரூபாயை தனது கணவரின் நண்பரான காவலர் அருண் குமாரிடம் வழங்குமாறு கூறினார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் பொன் தங்கவேல் புகார் அளித்ததால், அவர்கள் கூறியபடி பணத்தை அருண்குமாரிடம் வழங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்து அவர் அளித்த தகவலின்பேரில் தாசில்தார் சரோஜாவையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments