ரூ 5 கோடி மதிப்பில் மிதக்கும் சொகுசு கப்பல் உணவகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? ஆவலுடன் காத்திருக்கும் பயணிகள்

0 509

கேரளா போல தமிழகத்தின் சென்னை முட்டுக்காடு படகு இல்லத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மிதவை கப்பல் உணவகம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்தப் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள், வேகமான இயந்திரப் படகுகள் என 30க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகுசவாரியில் ஈடுபட்டு வருகின்றனர்

முட்டுக்காடு படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலாபயணிகளை கவர்வதற்காக ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கப்பட்டது.

தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) இதுவாகும்.

இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்படுள்ளது. நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட்டு உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட உள்ளது.

சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பலில் மேல் பகுதி இருக்கை அமைக்கும் பணிகளும், சுற்றுலா பயணிகள் செல்ல கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும்,

இன்னும் 2 மாதத்திற்குள் பணிகள் முழுமையடைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் உணவக கப்பலை இந்த கோடை விமுறைக்கே பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே பயணிகளின் ஆவலாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments