துபாயில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த கலை அருங்காட்சியம்..ஒவ்வொரு அறைக்கும் ஒரு இசை, ஒரு வாசனை என விசித்திர அனுபவம்
துபாயில், காட்சி இன்பம் மட்டுமின்றி காண்போரின் நாசிக்கும், செவிக்கும் விருந்து படைக்கும் விதமாக கலை அருங்காட்சியகம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
”ஆர்ட் மியூசியம்” என்ற அந்த அருங்காட்சியகத்தில், இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகத் தீட்டப்பட்ட ஓவியங்கள்
எல்.இ.டி. திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறைக்கும் ஒரு பின்னணி இசை, ஒரு பிரத்யேக வாசனை என பார்வையாளர்களுக்கு விதவிதமான அனுபவங்கள் கிடைப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments