சர்வதேச கான்ஸ் திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது.. நடிகை மெரில் ஸ்ட்ரீப்புக்கு Palme d'Or, கௌரவ விருது
பிரான்சின் கான்ஸ் நகரில் 77வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இம்மாதம் 25ம் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது.
முதல் நாளில் ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப்புக்கு கௌரவ விருது வழங்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரைப்பட விழாவுக்கு வருகை தரும் நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து பல்வேறு பிரிவுகளில் திரையிடுவதற்காக மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 8 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 6 படங்கள் முக்கிய விருதுகளுக்குப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகைகள் ஐஸ்வர்யா ராய், அதிதி ராய். ராதிகா ஆப்தே, கியரா அத்வானி உள்ளிட்டோரும் இந்த ஆண்டு கான்ஸ் விழாவில் பங்கேற்கின்றனர்.
Comments