பத்திரப் பதிவு கட்டணம் பல மடங்கு உயர்வு... தீர்ப்பை மதிக்காமல் உயர்த்தப்பட்ட கட்டணத்தையே தமிழக அரசு வசூலித்து வருகிறது : அண்ணாமலை
தி.மு.க.வுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழக அரசு செயல்படுகிறதா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 ஆண்டுகளில் மாதம் ஒரு முறை ஏதோ ஒரு வகையில் கட்டண உயர்வைச் சுமத்தி வரும் தி.மு.க. அரசு, தற்போது 26 வகையான சேவைகளுக்கான பத்திரப் பதிவு கட்டண உயர்வைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்குப் பல மடங்கு உயர்த்தியிருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
2023 ஏப்ரலில் வழிகாட்டி மதிப்பை 50 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கத் தொடங்கிய தி.மு.க. அரசின் செயல்பாடு சட்ட விரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், தீர்ப்பை மதிக்காமல் உயர்த்தப்பட்ட கட்டணத்தையே அரசு வசூலித்து வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Comments