செஸ் விளையாட்டு குறித்து அமெரிக்க தொழிலதிபர் எலாக் மஸ்க் கூறியுள்ள சர்ச்சை கருத்து

0 254

செஸ் விளையாட்டு குறித்து அமெரிக்க தொழிலதிபர் எலாக் மஸ்க் கூறியுள்ள சர்ச்சை கருத்துக்கு கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செஸ் விளையாட்டு நிஜ வாழ்க்கையில் பெரிய பலன் தருவதில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மஸ்க், அடுத்த 10 ஆண்டுகளில் செஸ் விளையாட்டின் புதிர்கள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டு ஒன்றுமில்லாமல் போகும் என்று கூறியுள்ளார்.

மனிதர்களை விட கணினிகள் செஸ் விளையாட்டை சிறப்பாக ஆடுவதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் உலக சாம்பியன் விளாடிமிர் கிரம்னிக், கணினியில் செஸ் விளையாட்டு சுவாரசியமாக இருந்தாலும் மனிதர்கள் நேருக்கு நேர் விளையாடுவதைக் காண ரசிகர்களுக்கு இன்றும் ஆர்வம் நீடிப்பதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments