சொர்க்கத்தை நோக்கி செல்லும் படிக்கட்டுகள்... பாட்டி நினைவாக சீன வாண வேடிக்கை நிபுணர் கண்கவர் நிகழ்ச்சி

0 275

சீனாவைச் சேர்ந்த வாண வேடிக்கை நிபுணர் ஒருவர், 10 ஆண்டுகளுக்கு முன், வானத்தை நோக்கி படிக்கட்டுகள் செல்வதுபோல் நெருப்பால் வித்தை காட்டிய காணொலி தற்போது வைரல் ஆகியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் உட்பட முக்கிய நிகழ்ச்சிகளில் கண்கவர் வாண வேடிக்கைகளை அரங்கேற்றிவரும் ஸை-கோ-சியாங் இந்த நெருப்பு வித்தையை நிகழ்த்தி இருந்தார்.

இறந்துபோன தனது பாட்டி நினைவாக, சொர்க்கத்தை நோக்கி படிக்கட்டுகள் செல்வதுபோல் காட்சி அமைப்பை உருவாக்க திட்டமிட்ட அவர், வெடிமருந்தால் சுற்றப்பட்ட தாமிர வயரை, ஹாட் ஏர் பலூனில் இருந்து ஆயிரத்து 650 அடி நீளத்திற்கு தொங்கவிட்டு எரியச்செய்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments