ஆன்லைன் செயலி மூலம் ரூ.26.18 லட்சம் மோசடி

0 295

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த வில்லியம் சுரேஷ்குமார் என்பவர், இன்வெஸ்ட்மென்ட் அப்ளிகேஷன் என்ற செயலி வாயிலாக 26 லட்சத்து 18 ஆயிரம் செலுத்தி ஏமாந்ததாக அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், 15 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை மீட்டனர்.

ஆன்லைனில் மோசடி செய்த நபர்களை மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேடிப்பிடித்து, மீட்கப்பட்ட பணத்தை வில்லியம் சுரேஷ்குமாரிடம் மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments