பூங்காவில் சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறிய விவகாரம்... 19 வயது வரை அவரது மருத்துவ செலவை நாய் உரிமையாளர் ஏற்க வலியுறுத்தல்
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ராட்வீலர் நாய்களால் கடித்து குதறப்பட்ட சிறுமிக்கு 19 வயது வரை ஆகும் மருத்துவ செலவை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என சிறுமியின் பாட்டி தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தாலும், அவருக்கு வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் இதே மருத்துவனையில் சிகிச்சை வழங்குவதற்கு தங்களுக்கு பொருளாதார வசதி இல்லை என தனலட்சுமி தெரிவித்தார்.
Comments