ஆந்திராவில் 25 மக்களவை, 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்... ஓய்எஸ்ஆர் காங்.- தெலுங்குதேச கட்சியினர் சில இடங்களில் மோதல்

0 315

ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுடன் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அன்னமய்யா மாவட்டத்தின் ரயில்வே கோடூரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாலுவாய் பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த நபரை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர்.

குண்டூரில் வரிசையில் நிற்காமல் நேராக வாக்குச்சாவடிக்குள் சென்றதை தட்டிக்கேட்ட வாக்காளரை தெனாலி தொகுதி ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சிவகுமார் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு அறைந்த வாக்காளரை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

அனந்தபூர் மாவடத்தில் ஒரு வாக்குசாவடியில் இரு கட்சியினர் இடையே நடந்த மோதலில் கற்கள் வீசப்பட்டதில் எஸ்.பி. அமித் பர்தார் காயமடைந்ததால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பல்நாடு மாவட்டத்தில் உள்ள குருஜால சட்டமன்றத் தொகுதியில் சில கிராமங்களிலும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments