சென்னை சிட்லபாக்கத்தில் ஆட்டோ ஒட்டிக் கொண்டே கல்லூரியில் பயிலும் 22 வயது மாணவனை சரமாரியாக வெட்டிய வழக்கில் 3 பேர் போலீசாரிடம் சரண்

0 543

சென்னை சிட்லபாக்கத்தில் ஆட்டோ ஒட்டிக் கொண்டே கல்லூரியில் பயிலும் 22 வயது மாணவனை சரமாரியாக வெட்டியதாகக் கூறி எலெக்ட்ரீஷியன் ஒருவரும் 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் உதயகுமார் என்ற அந்த எம்.பி.ஏ. மாணவர், தாம் வசிக்கும் திருவள்ளூர் நகர் பகுதிக்கு வரும் புதிய ஆட்களிடம், இது எங்க ஏரியா என்று கூறி மிரட்டும் தொனியில் பேசுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வேலை விஷயமாக அடிக்கடி வந்து சென்ற தம்மை உதயகுமார் மிரட்டி தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்து தமது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் 2 பேருடன் சென்று அவரை வெட்டியைதாகவும் சேலையூர் மப்பேட்டைச் சேர்ந்த நரேஷ் என்ற எலெக்ட்ரீஷியன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments