தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் குந்துக்கோட்டை - அந்தேவனப்பள்ளி கிராமங்களுக்கு இடையே இருந்த தற்காலிக சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக 3 கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் வீசிய பலத்த காற்றால் குந்துகோட்டை கிராமத்தில் அறுவடைக்கு தயராக இருந்த வாழைமரங்களும் சாய்ந்தன.
Comments