வாய்ப்புற்றுநோய் பாதித்து வாழ்நாளை எண்ணும் ஆட்டோ ஓட்டுநர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 ஆண்டுகளுக்கு முன் புகையிலைப் பழக்கத்தை கைவிட்ட குமார் என்கிற ஆட்டோ ஓட்டுநர், வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
குமாரின் மகள் கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வரும் நிலையில், அவரது மகன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வழியின்றி காத்திருக்கிறார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்த குமாருக்கு தற்போது வீட்டில் வைத்தே மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகையிலைப் பொருட்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் குமாரின் மனைவி, தங்களுக்கு ஒரு வீடும் வாழ்வாதாரத்துக்காக தனக்கு ஒரு வேலையும் வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments